குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
அலிஸா ஹீலி விலகல், தீப்தி சர்மா கேப்டன்
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: 14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிஸா ஹீலி காயம் காரணமாக மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதன் காரணமாக, யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, உள்ளூர் போட்டிகளில் பெங்கால் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகளை தீப்தி சர்மா கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.