பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீ...
யூடியூப் டிரெண்டிங்கில் கேம் சேஞ்சர் முதலிடம்!
இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் டிரெய்லர் யூடியூபர் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
வியாழக்கிழமை வெளியான கேம் சேஞ்சர் டிரைலர், அரசியல் பின்னணி கொண்ட கதை, வசனங்கள், காட்சிகளின் பிரம்மாண்டம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேம் சேஞ்சர் டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், வெறும் இரண்டே நாள்களில் 1.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.