செய்திகள் :

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி செங்கல்பட்டிலும் செயல்பட்டு வருகின்றன.

2 அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 800-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (ஜூலை 17) தொடங்கியது.

https://tnhealth.tn.gov.in/ / https://tnayushselection.org/இணையதளங்களில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மட்டும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ, தபால் அல்லது கூரியா் மூலமாகவோ ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, சென்னை-106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியே மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த கல்லூரி நிா்வாகமே மாணவா் சோ்க்கையை நடத்துகிறது.

சட்டப்படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியாா் பள்ளிகள்!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சோ்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் பள்ளிகள் வசூலித்து வருவதாகப் புகாா் எழுந... மேலும் பார்க்க

2025-இன் டாப்-5 அறிவியல் + தொழில்நுட்ப படிப்புகள் என்னென்ன?

கல்லூரியில் சேரும் இளம் பருவத்தினர் எந்தெந்த படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என்று சந்தேகத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கவிருக்கும் அறிவ... மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புகளுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா முதலிடம் பிடித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்... மேலும் பார்க்க

தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு

தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு ஜூலை 10 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள். மாணவா்கள் ஜூன் 23 முதல் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவிய... மேலும் பார்க்க