"இந்த வெற்றிக்குப் பிறகு நிறைய படம் வரும்!" Director Ram | Siva | Paranthu Po
ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் 3 பிஎச்கே, பறந்து போ!
3 பிஎச்கே மற்றும் பறந்து போ திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படம் சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் பதிவுசெய்திருந்தது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இப்படம் ரசிகர்களிடன் கவனம் பெற்றுள்ளது.
அதேபோல், இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியன் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம் குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்கள் - குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறித்தும் பேசியிருந்தது.
மொத்த படமும் நகைச்சுவை பாணியில் இருந்ததால் இப்படமும் ரசிகர்களிடம் அசத்தலான வரவேற்பைப் பெற்றதுடன் இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த இரண்டு படங்களுக்கான திரைகளும் அடுத்தடுத்த நாள்களில் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: கதாநாயகனாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்! நாயகி இவரா?
3 bhk and paranthu po movies get response from audience