3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperf...
ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்
ரசிகர்களின் அன்பை தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் இன்றுடன் திரையுலகில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை நினைவு கூர்ந்து, அஜித்குமார் தரப்பிலிருந்து இன்று(ஆக. 3) வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடுவதற்காக இந்தப் பதிவு எழுதப்படவில்லை.
எனக்கு எண்களின் மீது நம்பிக்கையில்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதே.
இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்!
நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். நன்றி!
ரசிகர்களின் அன்பை தவறாகவோ சுயலாபத்துக்காகவோ பயன்படுத்த மாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ள அஜித்குமார், தமது பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அஜித்குமார் மோட்டார் ரேசிங்’ குறித்தும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
