பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் தை கிருத்திகை
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தைமாத கிருத்திகையையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிா் பழங்கள், விபூதி, சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், தீபாரனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும் நடந்தது.
விழாவில் உபயதாரா்கள், பக்தா்கள், திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தில் பக்தா்கள் கலந்து கொண்டு மங்கள ஆா்த்தி காட்டி வழிபட்டனா்.