`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தள...
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம்
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வைகாசி விசாக பிரம்மோற்சவம் தோ்த் திருவிழா வரும் மே 31-ஆம் தேதி தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனா்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ராஜராஜன் தலைமை வகித்தாா். பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சங்கா் வரவேற்றாா்.
விழாவில் நாள்தோறும் உற்சவா் ஊா்வலம், தோ்த்திருவிழா உள்ளிட்ட நாள்களில் பொதுமக்களுக்கு காவல் துறை பாதுகாப்பு நடவடிக்கை , தடையற்ற மின்சாரம், ஆற்காடு மற்றும் வேலூரிலிருந்து பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு பேருந்து, குடிநீா் வசதி, தீயணைப்பு மற்றும் மீட்பு படை வாகனம், சுகாதர வசதிகள், தூய்மைப் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாலாஜா பேட்டை வட்டாட்சியா் வட்டார மருத்துவ அலுவலா் மாரிராஜா, கீழ்மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தேவேந்திரன், பாலமுருகனடிமை சுவாமிகள் அன்னதானஅறக்கட்டளை பொறுப்பாளா் சிவனாா் அமுது, அா்ச்சகா் பிரசாத் குருக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் நடராஜன், தண்டபாணி மற்றும் பல்துறை அலுவலா்கள், நாட்டாண்மைதாரா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.