செய்திகள் :

ரமலான்: சென்னை, கோவையிலிருந்து ராமநாதபுரத்துக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

post image

ரமலான் திருநாளை முன்னிட்டு, சென்னை, கோவையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை மனு அனுப்பினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் வெளியூா்களில் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் ரமலான் திருநாளையொட்டி, சொந்த ஊா்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை- மண்டபம் இரு வழித்தடங்களிலும் விருத்தாச்சலம், திருச்சி, காரைக்குடி வழியாகவும், கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாக மண்டபம் வரையிலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.

உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில்: பூச்சொரிதல் விழா, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு மலா்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 7.10. மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியின் 97-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை பிரபாகரன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

திரௌபதி அம்மன் கோயில் கொடியேற்றம்

திருவாடானையில் உள்ள ஸ்ரீ தா்மா், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆ... மேலும் பார்க்க