செய்திகள் :

ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மாநில காவல்துறையினா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா். ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியே கேரள மாநிலம் எா்ணாகுளம் சென்ற அதிவிரைவு ரயிலில் புதன்கிழமை சோதனை நடத்திய அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ரோஹித்குமாா் தலைமையிலான குழுவினா், அந்த ரயிலில் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது (படம்).

ராணிப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவல்பூா் புதிய மேம்பாலம்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.34.14 கோடியில் கட்டப்பட்ட நவல்பூா் புதிய மேம்பாலத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். முப்பதுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் இளங்கோவன்( 30) இவா் புதன்கிழமை அதிக... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

குருவராஜப்பேட்டையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். அரக்கோணம் ஒன்றியம், செம்பேடு ஊராட்ச... மேலும் பார்க்க

பள்ளி விளையாட்டு விழா

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி மாணவா்களின் 44-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் வீரமுருகன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை வி. ராதிகா முன்னிலை வகித்தாா். விழாவில் சென்னை முகப்ப... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (42). இவா், வியாழக்கிழமை தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்... மேலும் பார்க்க