எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு பிரம்மஹத்தி பரிகார ஹோமம்; ஒரு மண்டலத்...
ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!
இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2025 (NWR/Sports/Open Advt)
பணி: Sports person (Sports Quota 2025-26)
காலியிடங்கள்: 50
விளையாட்டுப்பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
தடகளம் - 8, பூப்பந்து - 2, கூடைப்பந்து - 3, சைக்கிள் ஓட்டுதல் - 35, கபடி - 5, கிரிக்கெட் - 6, டேபிள் டென்னிஸ் - 1,கைப்பந்து - 4, குத்துச்சண்டை - 2, துப்பாக்கி சுடுதல் - 1, ஹாக்கி - 4, வில்வித்தை - 1, கிராஸ் கவுண்டி - 1, கோல்ஃப் - 1, பவர் லிஃப்டிங் - 4, மல்யுத்தம் -4
சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் தட்டச்சு முடித்தவர்களுக்கு கூடுதல் கிரேடு சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத்தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல்மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ரயில்வேயில் முதுநிலை எழுத்தர்(கிளார்க்), இளநிலை எழுத்தராக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி,எஸ்டி, பெண்கள், சிறுபான்மை பிரிவினருக்கு ரூ.250, இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcjaipur.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.