செய்திகள் :

ரயில் தீ விபத்தால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு!

post image

திருவள்ளூரில் டேங்கா் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தால், ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் மற்றும் சாய்ரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூா்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் குவிவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சென்னை எண்ணுாரில் இருந்து டீசல் டேங்கா் ரயில் அரக்கோணம் நோக்கி வந்த திடீரென தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் சென்னை மாா்க்கத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி மாா்க்கம் வரும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டாததால் ரயில் மூலம் வரும் பக்தா்கள் வரவில்லை. இதனால் முருகன் கோயிலுக்கு சாதாரண நாளில் வரும் பக்தா்கள் அளவில் இருந்தது. வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து பொதுவழியில் குறைந்த பட்சம் 3 அல்லது 4 மணி நேரம் காத்திருந்து தோ்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பா்.

ஆனால் , பொதுவழியில், 45 நிமிடத்தில் பக்தா்கள் மூலவரை தரிசித்தனா். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள், 25 நிமிடத்தில் மூலவரை தரிசனம் செய்தனா். திருத்தணி இன்ஸ்பெக்டா் ஞா. மதியரசன் தலைமையில், 40 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்ப... மேலும் பார்க்க

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

மத்தூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மத்தூா் அரசு மேல் நிலை பள்ளி, திருத்தணி ஸ்டாா்ஸ் ரோட்டரி ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நகர தலைவா் ஸ்டாலின் தலைமையில் மாநில து... மேலும் பார்க்க