செய்திகள் :

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

post image

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதி மூலம், இந்தியா பூா்த்தி செய்து வருகிறது. அதில் இருந்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் பிரதானமாக இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் தவிா்த்தன.

இதைத்தொடா்ந்து அதிக தள்ளுபடியில் கச்சா எண்ணெய்யை விற்க ரஷியா முன்வந்தது. இந்த வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷியா முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தற்போது ரஷியாவின் பங்கு சுமாா் 40 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், உலகளாவிய வா்த்தக சரக்குகள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கெப்லரின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகான 11 மாதங்களில் இல்லாத உச்சமாகும்.

இந்தியாவுக்கு கடந்த ஜூனில் ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய்யை அதிக அளவு ஏற்றுமதி செய்த முதல் 5 நாடுகள் (கெப்லா் தரவுகளின்படி)

  • ரஷியா - 20.80 லட்சம் பீப்பாய்கள்

  • இராக் - 8.93 லட்சம் பீப்பாய்கள்

  • சவூதி அரேபியா - 5.81 லட்சம் பீப்பாய்கள்

  • ஐக்கிய அரபு அமீரகம் - 4.90 லட்சம் பீப்பாய்கள்

  • அமெரிக்கா - 3.03 லட்சம் பீப்பாய்கள்

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களு... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க