2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
ரஷியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒலிம்பிக்ஸ் 2028 குறித்து விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப்பிடம், ரஷியாவிடமிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை அமெரிக்கா வாங்குவதாக இந்தியா குற்றம் சாட்டுவதாக கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சரிபார்த்துச் சொல்கிறேன் என்றுகூறி மறுத்து விட்டார்.
மேலும், ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான வரிகுறித்த கேள்விக்கு,
வரி சதவிகிதம் குறித்து நான் எதுவும் தெரிவிக்கவில்லை. வரும் சில நாள்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ரஷியாவுடன் நாளை சந்திக்கவுள்ளோம், என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்தார்.
ஜனவரி 2022-லிருந்து ரஷியாவிலிருந்து 24.51 பில்லியன் டாலருக்கு அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. 2024-ல் மட்டும் 1.27 பில்லியன் டாலருக்கு உரங்களும், 624 மில்லியன் டாலருக்கு யுரேனியம் மற்றும் புளுட்டோனியமும், 878 மில்லியன் டாலருக்கு பல்லேடியமும் அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.