செய்திகள் :

ரஷிய போரில் இந்தியர் பலி...6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!

post image

ரஷிய-உக்ரைன் போரில் பலியான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபரது உடல் 6 மாதங்கள் கழித்து அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (வயது-41) கடந்த ஜனவரி மாதம் ரஷியவில் சமையல்காரராக பணியாற்ற சென்றார்.

சமையல் பணிக்காக செயிண்ட் பீட்டர்ஸ்பர் நகருக்கு சென்ற அவர் ரஷிய ராணுவத்திற்காக உக்ரைனுடனான போரில் சண்டையிட அனுப்பப்பட்டார்.

கடந்த மே மாதம் 9 ஆம் தேதியன்று போரில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் அம்மாதம் 25 ஆம் தேதி வரை அவரது குடுமத்தினருடன் தொடர்பிலிருந்ததாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றியது! 42 பேர் பலி

இந்நிலையில், கடந்த டிச.6 ஆம் தேதியன்று ரஷியாவிலுள்ள இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யாதவ் கடந்த ஜூன் மாதம் 17 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று ரஷியாவிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் வாரணாசி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு அவரது கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த கன்ஹையா யாதவிற்கு ஒரு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

முன்னதாக, உயிரிழந்த கன்ஹையா யாதவின் குடும்பத்திற்கு ரஷிய அரசு சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 ஆமைகள் மீட்பு!

தெலங்கானாவில் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 அரியவகை ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்திற்கு அரிய வகை ஆமைகள் விற்பனைக்காகக் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் த... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் தி. அரப்பா காலமானார்!

சிவகங்கை: மதுரை மாவட்ட பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகியும், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையை தொடங்கி நடத்தி வந்தவருமான தி. அரப்பா(65) வியாழக்கிழமை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில... மேலும் பார்க்க

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் நிலத்தகராறில் 45 வயது விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அயோத்தி மாவட்டம் வண்டியா குருட் எனும் கிராமத்தைச் சேர்ந்த அஹில்கர் (வயது-45) எனும் விவசாயி, ந... மேலும் பார்க்க

துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுமி படுகாயம்!

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் 8 வயது சிறுமி படுகாயம்.கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அனுஷ்கா (வயது-8) என்ற சிறுமியின் குடும்பத்தினர் இன்று (டிச.26) ... மேலும் பார்க்க

நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு பாண்டாக்கள்!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 சிவப்பு பாண்டாக்கள் வரவழைக்கபட்டன.கிழக்கு இமயமலைப் பகுதிகளிலும் தென்மேற்கு சீனாவையும் பூர்வீகமாகக் கொண்டவை சிவப... மேலும் பார்க்க

'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் பிறந்த நாளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க