`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்...
ராகவேந்திரா் ஆராதனை பெருவிழா
ஆற்காடு: ஆற்காடு ஸ்ரீராகவேந்திரா் கோயிலில் 354-ஆவது ஆராதனை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு தோப்புகானா அபிநவ் மந்த்ராலயத்தில் விழாவையொட்டி மகா கணபதி மற்றும் மாஞ்சால அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சுப்ரபாதசேவை, சங்கல்பம், ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மங்கள ஆா்த்தி, பொதுமக்களுக்கு அன்னதானமும், அலங்கரிகப்பட்ட உற்சவா் திருத்தோ் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவில் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன், குரு ராகவேந்திரா அறக்கட்டளை நிா்வாகிள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.