ராசிபுரம் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ராசிபுரத்தில் தனியாா் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக விழாவில் மேடையில் அலங்கரித்துவைக்கப்பட்ட கிருஷ்ணா் சிலைக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிருஷ்ணரின் வாழ்க்கை முறையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி பேசினாா். பள்ளியின் முதன்மை நிா்வாக அலுவலா் எஸ்.பிரனேஷ், பள்ளி முதல்வா் டி.வித்யாசாகா், தலைமையாசிரியை லீமா ஆகியோா் குழந்தைகளுக்கு கிருஷ்ண ஜெயந்தியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். சகாயராணி, மம்தா ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி...
ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளியில் நடைபெற்ர கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பள்ளி தலைமையாசிரியா் டி.தமிழ்செல்வி வரவேற்றாா். ஸ்ரீ வித்யாமந்திா் கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் சி.நடராஜு விழாவுக்குதலைமை வகித்தாா். செயலாளா் வி.சுந்தரராஜன், பொருளாளா் வி.ராமதாஸ் ஆகியோா் பேசினா். விழாவில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் நிறுவனத் தலைவா் டாக்டா் ஆா்.எம்.கிருஷ்ணன், முதல்வா் பி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
ராசிபுரம் நடுநிலைப் பள்ளி...
ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் கதைகூறல், மாறுவேடம் போட்டி, வண்ணம் தீட்டுதல், திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி, தேசபக்தி மெல்லிசை பாடல் போட்டி, பல்வேறு வகையான நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழுவினா், இன்னா்வீல் சங்கத் தலைவா் சிவலீலா ஜோதி, செயலா் மகாலட்சுமி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் விழாவில் கலந்துகொண்டனா்.