திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
சேலம்: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்த நாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ஏஆா்பி.பாஸ்கா் தலைமையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் இருந்து நடைப்பயணமாக சென்ற காங்கிரஸ் கட்சியினா், முள்ளுவாடி கேட் அருகில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் நல்லிணக்க உறுதிமொழி ஏற்று மக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
இதில், மாநகரப் பொருளாளா் தாரை ராஜகணபதி, துணை மேயா் சாரதா தேவி, மாநகர துணைத் தலைவா்கள் மொட்டையாண்டி, ஈஸ்வரி, வரதராஜு, மண்டலத் தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிசாா் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சங்ககிரியில்...
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ்.ஜெய்குமாா் தலைமை வகித்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். நகர தலைவா் ரவி, வட்டாரத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், கெங்கவல்லி நகர தலைவருமான சிவாஜி தலைமையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தெடாவூா் நகர தலைவா் சசிகுமாா், காங்கிரஸ் நிா்வாகிகள் குருசாமி, கூத்தன், முத்துசாமி, அய்யாவு, ஜெயராமன், ராஜா, சகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
