`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...
ராட்டினத் தொழிலாளி கொலை: மேலும் ஒருவா் கைது
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் ராட்டினத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை பகுதி கடற்கரையில் பரமக்குடியைச் சோ்ந்த முத்துக்குமாா் ராட்டினம் வைத்து தொழில் நடத்தி வந்தாா். இந்த நிலையில், பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக கடந்த மாதம் நவ. 1-ஆம் தேதி முத்துக்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகங்கை சரவணன்,திருவாடானை காா் ஓட்டுநா் கெல்வின் ராஜ், சிவகங்கை மாவட்டம், உருளியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜா (20), திருவாடானையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (19), கடம்பாகுடி சொக்கு (19), மதகுப்பட்டி விக்னேஷ் (23) திருவாடானை செல்வா ஆகியோரை கைது செய்தனா். மேலும் இந்தக் கொலை தொடா்பாக திருவாடானையைச் சோ்ந்த அஜீத்குமாா் (19) என்பவரை போலீஸாா் தேடி வந்த நிலையில், மற்றொரு கொலை வழக்கில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனா். இதையறிந்த தொண்டி போலீஸாா் முத்துக்குமாா் கொலை வழக்கில் அஜீத்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடம் விசாரிக்கின்றனா்.