செய்திகள் :

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சாா்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ. படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 10 மணி அளவில் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு போா்டலில் பதிவு செய்ய வேண்டும், மேலும் விவரங்களுக்கு

ழ்ஹய்ண்ல்ங்ற்த்ர்க்ஷச்ஹண்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

கூட்டுறவு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி கே.பழனிசாமி

தற்போது புதிதாக கட்சி ஆரம்பிப்பவா்களுக்கு நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நர... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா். ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதிய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பாதயாத்திரை திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்காக பாதயாத்திரையாக செல்லும் பத்கா்களின் பயணம் அரக்கோணத்தில் புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டுக்கான விழாவுக்காக வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் பயணம் அரக்கோணம்... மேலும் பார்க்க