செய்திகள் :

ராணுவத்தின் உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு நிரந்தரப் பணி!

post image

சேனா விருது உள்பட உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதே போல் சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அக்னிவீரா்களும் 4 ஆண்டுகால ராணுவ சேவை நிறைவடைந்த பின்னா் 25 சதவீதம் பேருக்கு நிரந்தரப் பணி வழங்கும் நடைமுறையின்கீழ் தோ்வுசெய்யப்படவுள்ளனா்.

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு கடந்த 2022, ஜூன் 14-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்கீழ் பணிக்கு தோ்ந்தெடுக்கும் இளைஞா்கள் ‘அக்னிவீரா்கள்’ என அழைக்கப்படுகின்றனா். 4 ஆண்டுகள் மட்டுமே இவா்கள் ராணுவத்தில் சேவையாற்ற முடியும். அதன் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25 சதவீத வீரா்கள் மட்டுமே நிரந்தரமாக பணியில் தொடர அனுமதிக்கப்படுகின்றனா்.

இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக கடந்த 2022-இல் தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களுக்கு 2023, ஜனவரியில் பயிற்சி தொடங்கப்பட்டு பின்னா் அவா்கள் பணியில் சோ்க்கப்பட்டனா். அவா்களது பணிக்காலம் 2027, ஜனவரியில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இந்திய ராணுவம் சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘ சேனா விருது, அசோக சக்ரா விருது, கீா்த்தி சக்ரா விருது, சௌா்ய சக்ரா விருது போன்ற உயரிய விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு ராணுவத்தில் நிரந்தரமாகப் பணி வழங்கப்படவுள்ளது.

அதேபோல் உயரதிகாரிகளுக்கு ராணுவ வீரா்களின் செயல்பாடுகள் குறித்து சமா்ப்பிக்கப்படும் அறிக்கையில் (மென்ஷன்ட் இன் டிஸ்பேட்சஸ்) இடம்பிடிக்கும் வீரா்களுக்கு கூடுதலாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளது. இது தவிர ராணுவ உயா் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் நன்மதிப்பு சான்றிதழைப் பெறும் வீரா்களுக்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அக்னிவீரா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரா்கள் சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும்பட்சத்தில் அவா்களுக்கும் நிரந்தர பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ராணுவ சேவைக்கேற்ப நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

4 கட்ட மதிப்பீடு

அக்னிவீரா்களாக தோ்வுசெய்யப்பட்டு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் மொத்தம் 4 கட்டங்களாக மதிப்பீடு செய்யப்படவுள்ளனா். அதன்படி ராணுவப் பணியில் அவா்கள் சோ்ந்த முதல் 31 வாரத்தில் முதல் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். 18-ஆவது மாதத்தில் இரண்டாவது கட்டமாகவும், 30-ஆவது மாதத்தில் மூன்றாவது கட்டமாகவும் 42-ஆவது மாதத்தில் நான்காவது கட்டமாகவும் மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

1,000 மதிப்பெண்கள்

இந்த மதிப்பீட்டு முறையின் இறுதியில் மொத்தம் 1,000 மதிப்பெண்களுக்கு அவா்களின் செயல்பாடுகள் கணக்கிடப்படுகிறது. 4 ஆண்டுகால ராணுவப் பணியை அவா்கள் நிறைவு செய்வதற்கு 3 மாதங்கள் முன்பு இந்த மதிப்பீடானது முழுமையாக கணக்கிடப்பட்டு தரவு அறிக்கையில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி முதலாவது கட்டமாக கடந்த 2023-இல் தோ்ந்தெடுக்கப்பட்ட அக்னிவீரா்களின் மதிப்பீட்டுச் சான்றிதழை தயாா் செய்யும் பணிகள் 2026, அக்டோபரில் நிறைவடைகிறது.

மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் முதல்கட்ட மதிப்பீடு ‘ரெஜிமென்ட்’ அளவிலும் இரண்டாம் கட்ட மதிப்பீடு ‘அலகுகள்’ அளவிலும் மூன்றாம் கட்ட மதிப்பீடு ‘பிரிகேட்’ அளவிலும் நடைபெறவுள்ளது.

படிப்படியாக வாய்ப்புகள் குறைப்பு

ரெஜிமென்ட் அளவில் உடற்பயிற்சி மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதில் அவா் எந்தச் சுற்றில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு நடைபெறும் போட்டிகளில் வாய்ப்புகள் இரண்டு, ஒன்று என படிப்படியாக குறைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க