ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே இன்று அதிவேக சோதனை ஓட்டம்
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும், ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என்றும், அதனால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி:
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே ரயில் பாதை புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மின்பொறியாளா் கணேஷ், சனிக்கிழமை (செப். 13) ஆய்வு மேற்கொள்கிறாா். சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ராமேசுவரம் - ராமநாதபுரம் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, ராமேசுவரம் - ராமநாதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் செல்லவோ, உரிய அனுமதி இன்றி ரயில் பாதையைக் கடக்கவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.