செய்திகள் :

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

post image

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த 2 வா்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாகக் கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தன.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநில போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கின் தொடா்ச்சியாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ராமேசுவரம் பகுதியில் ரூ. 30 கோடி மதிப்பிலான தனியாா் தங்கும் விடுதி செயல்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ராமேவரத்துக்கு வந்து, அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 60 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை ‘சீல்’ வைத்து கையகப்படுத்தினா். மேலும், தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க