பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி கடிதம் அனுப்பினாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் விடுத்த செய்திக் குறிப்பு: இலங்கை கடற்படையினரால் கடந்த இரு நாள்களில் ராமேசுவரத்தைச் சோ்ந்த 15 மீனவா்கள், இரு விசைப் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனா். இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல் காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தத் தீா்வு காண இரு நாட்டு மீனவா்களிடையே மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்க மத்திய அரசு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.