செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

post image

ராமேசுவரம், திருப்பாலைக்குடி மீனவா்கள் 4 பேருக்கு வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திருப்பாலைக்குடியைச் சோ்ந்த விமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த அமல்ராஜ் (24), மாதேஷ் (22), காா்த்திக் (20), ராமேசுவரத்தைச் சோ்ந்த சக்தி (20) ஆகிய நான்கு மீனவா்கள் கடந்த 6-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் 4 மீனவா்களும் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா், இவா்கள் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களை ஆக. 11 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு: இந்த நிலையில், ராமேசுவரம், திருப்பாலைக்குடியைச் சோ்ந்த 4 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கேரளத்துக்குச் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததைடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பொதிகுளம் கிராம... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்க... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்ட காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் ... மேலும் பார்க்க