செய்திகள் :

ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல் வீடியோ!

post image

வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மூலம் தங்களின் அன்றாட வேலைகள் குறித்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். சமையல் தொடங்கி சமுதாய கருத்துகள் வரை பல விஷயங்களை ரீல்ஸ் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் வட இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் சந்தித்த ஒரு சம்பவம் குறித்து வீடியோவாக 2 நாள்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் வீட்டின் மாடிப்பகுதி ஸ்னாப் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த ஒரு நபர் அவர் மீது தொட்டுவிட்டு மாடி படியின் மேலே ஏறிச் செல்கிறார்.

வேகமாக அந்த பெண், அந்த நபரின் கையைப் பிடித்து எச்சரிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நபரை அந்தப் பெண் அறைந்து விடுகிறார்.

இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு, "அந்த நபர் அடிக்கடி இது போன்று என்னிடம் நடந்து கொள்வார். நான் வீடியோ ஆதாரத்துடன் அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் காட்டிய போது அவரது மனநலம் மோசமாக இருப்பதாக குடும்பத்தினர் கூறினார்கள்.

இந்த மனநோய் எந்த கோணத்தில் இருந்து தோன்றுகிறது? என் உடையை வைத்து மக்கள் என்னை மதிப்பிடுகிறார்கள் நான் நல்ல உடை அணிந்து இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் நான் சேலை அணிந்து இருந்தாலும் அல்லது சுடிதார் அணிந்திருந்தாலும் இதே போல் தான் நடந்திருக்கும் என்பது எனக்கு தெரியும்" என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி பலரும் இதற்கு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

``நோ லிமிட், நோ கமிட்மெண்ட்'' - சீன இளைஞர்கள் விரும்பும் `நட்பு திருமணம்'.. காரணம் என்ன?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அதில் காதல், காமம், பொறுப்புகள் என பல விஷயங்கள் இருக்கும். ஜென் z தலைமுறையினரிடம் திருமணம் இல்லாத உறவுகள் பிரபலம் அடைந்து வரும் நிலையில், சீனாவில் காதல் இல... மேலும் பார்க்க

கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன. டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறுகிய கால விசாவில் இருக்கும் 1000 பாகிஸ்தானியர்கள் வெளியேற பட்னாவிஸ் உத்தரவு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பத... மேலும் பார்க்க

``உயிரோடு இருக்கும் போதே எனக்கும், மனைவிக்கும் கட்டிய கல்லறை.." -ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் உருக்கம்

கர்நாடகாவில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர் தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கும், தனது மனைவிக்கும் கல்லறை கட்டியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் மைசூரு அருகில் இருக்கும் வலகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் இந்தியாவையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கு நடந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு சம்பவமும் பல்வேறு வகையில் மக்களிடம் பகிரப்படுகிறது.குறிப்பாக சுவிட்சர்லாந்து விசா மறுக்கப்... மேலும் பார்க்க

`டூரை முடித்துவிட்டு தான் வருவோம்’ - காஷ்மீரில் சுற்றுலாவை தொடரும் பயணிகள் - என்ன சொல்கிறார்கள்?

காஷ்மீரில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக தங... மேலும் பார்க்க