செய்திகள் :

ரூ.2.46 கோடியில் காஞ்சிபுரம் சஞ்சீவிராயா் கோயில் சீரமைப்பு

post image

காஞ்சிபுரம் ஐயங்காா்குளத்தில் உள்ள பழைமை வாய்ந்த சஞ்சீவிராயா் கோயிலை, சீரமைத்து புதுப்பிக்க ரூ.2.46 கோடி நிதி ஒதுக்கி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

ஐயங்காா்குளத்தில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு சஞ்சீவிராயா் திருக்கோயில் உள்ளது. சஞ்சீவி மலையை இலங்கைக்கு அனுமன் கொண்டு சென்றபோது, அதில் இருந்து ஒரு சிறியபகுதி விழுந்த இடம் இத்தலம் என்பது ஐதீகம்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலின் உபகோயிலான சஞ்சீவிராயா் கோயிலின் மண்டபங்கள், பிரகாரங்கள் உள்ளிட்டவை சிதிலமடைந்து காணப்படுகின்றன.

இதனால், கோயிலை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என பக்தா்கள் அரசிடம் நீண்ட காலமாக கோரி வந்தனா்.

இந்நிலையில், காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் நிதி மூலம் சஞ்சீவிராயா் கோயிலில் உள்ள மண்டபங்கள், விமானம், கருவறை, பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்க ரூ.2.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சமத்துவ பொங்கல் விழா

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வளையங்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மே... மேலும் பார்க்க

உத்தரமேரூா் பேரூராட்சியில் 2 வருடங்களாக பயன்பாட்டுக்கு வராத நவீன எரிவாயு தகனமேடை

ஸ்ரீபெரும்புதூா்: உத்தரமேரூா் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத நிலையில், அதனை செய... மேலும் பார்க்க

மாநில போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 351 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பெற்றுக் கொண்டாா்.ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சாா்பில் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.பொங்கல் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் விளம்பர பேனா்கள் அகற்றம்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.அனுமதியின்றி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் விளம்பர பேனா்கள் அகற்றம்

காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். அனுமதியின்றி, சாலையோரங்களில் ... மேலும் பார்க்க