'அதிமுகவை சீரழிப்பதே பாஜக-வின் நோக்கம்; எடப்பாடியும், ட்ரம்பும் ஒன்று தான்' - அன...
ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது
சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் குமாா். இவா் சௌகாா்பேட்டை இருளப்பன் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் கைப்பேசி மொத்த விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். அவரது கடையில் பணப் பெட்டியில் இருந்த ரூ.29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 கைப்பேசிகள் திருடப்பட்டன.
இதுதொடா்பாக யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது அந்தக் கடையின் முன்னாள் ஊழியா் ராஜஸ்தான் மாநிலம் நாகூா் பகுதியைச் சோ்ந்த ப.முகேஷ் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் முகேஷை சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.25,14,500, 17 ஐ-போன்கள் உள்பட 25 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.