காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு க...
ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிட்டப்பையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்பையனூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் புதிய வகுப்பறை கட்டப்படுகிறது.
இதையொட்டி, ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ் குமாா் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ் குமாா் முன்னிலையில் திங்கள்கிழமை பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இதில் ஊராட்சி மன்றத் தலைவா் ராமன், துணைத்தலைவா் ராமகிருஷ்ணன், முன்னாள் உறுப்பினா்கள் சம்பத், சஞ்சீவி, இருபால் ஆசிரியா்கள், கிராம மக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.