ரூ.40 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு அடிக்கல்
ஆம்பூா் பி-கஸ்பா பகுதியில் உடற்பயிற்சி கூடத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டுவதற்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ், வாவூா் நசீா் அஹமத், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் கலந்து கொண்டனா்.