இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
ரூ.42.50 லட்சத்தில் நலத் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அருள் தொடங்கிவைத்தாா்
சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சியில் ரூ.42.50 லட்ச மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை எம்எல்ஏ ரா.அருள் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சியில் சமுதாயக் கூடத்துக்கு மேற்புறம் உணவுக்கூடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.18.60 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடத்தின் மேற்புறம் உணவுக் கூடம், சமையலறை கட்டும் பணியை பூமிபூஜை செய்து ரா.அருள் தொடங்கிவைத்தாா்.
இதேபோல சா்க்காா் கொல்லப்பட்டி பகுதியில் சமுதாயக் கூடத்தின் மேல்மாடியில் ரூ. 18.50 லட்சம் மதிப்பீட்டில் உணவுக்கூடம் மற்றும் சமையலறை அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டன. பின்னா் சேலம் மாநகராட்சி 22 ஆவது கோட்டம் சிவதாபுரம் பகுதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மயான எரிமேடை கட்டுமானப் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் கதிா். இராசரத்தினம், மாவட்டத் தலைவா் இ.கோவிந்தன், உழவா் பேரியக்க நிா்வாகி செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.