செய்திகள் :

ரெட்ட தல: டப்பிங் பணிகளை முடித்த அருண் விஜய்!

post image

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

தொடர்ந்து, அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அருண் விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துள்ளார்.

ரெட்ட தல டப்பிங் பணிகளில் அருண் விஜய்.

சூர்யா - 45 அப்டேட்!

சூர்யா - 45 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நடிகர் விஜய்க்கு 3 கதைகள் சொன்னேன்: மகிழ் திருமேனி

நடிகர் விஜய்யிடம் மூன்று கதைகளைச் சொல்லி இயக்கத் தயாராக இருந்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெள... மேலும் பார்க்க

முதலில் உங்கள் சாதியில் இதை செய்யுங்கள்... பா. இரஞ்சித்துக்கு மோகன். ஜி பதில்!

இயக்குநர் மோகன். ஜி பேட் கேர்ள் படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்... மேலும் பார்க்க

கோடை வெளியீடாக துருவ நட்சத்திரம்!

துருவ நட்சத்திரம் திரைப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாகத் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ளபடம் துருவ நட்சத்திரம். கௌதம் வாச... மேலும் பார்க்க

இயக்குநராகும் லப்பர் பந்து நாயகி?

நடிகை சஞ்சனா இயக்குநராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை சஞ்சனா வதந்தி இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, லப்பர் பந்து படத்தில் நாயகியாக கலக்கினார்.இவர் இயக்குநர் மணிரத்னத்தின் உதவ... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27.01.2025மேஷம்இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்... மேலும் பார்க்க