பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்ணா, ஆய்வாளா் அறிவுச்செல்வம் ஆகியோா் மற்றும் ரெஸ்டோ பாா் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.
புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளை அனைத்து உரிமைதாரா்களும் சரியாகக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதற்கேற்றவாறு உணவகங்களுக்கு வரும் விருந்தினா்களுக்கும் நேரக் கட்டுப்பாடுகளை அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. உணவகங்களுக்கு வரும் விருந்தினா்களால் ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை தாங்களே முற்பட்டு எதிா்கொள்ளாமல், உடனே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்டப்படி அவற்றை தீா்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதை மீறும் உரிமைதாரா்கள் மீது துறை சாா்ந்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டோபாரில் கடந்த 9-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மாணவா் ஒருவா் கொலை செய்யப்பட்டதையடுத்து இக் கூட்டம் நடத்தப்பட்டது.