செய்திகள் :

ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் 1,400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் காந்தி நகரில் ஒரு கட்டடத்தில் போலீஸாா் சோதனையிட்டனா்.

அங்கு 35 மூடைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கியதாக தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த சுடலைமணியை (37) போலீஸாா் கைது செய்தனா்.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க