அகமதாபாத் விமானத்தில் திடீா் கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்
லாரியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கந்திகுப்பம் அருகே சரக்குகளை ஏற்றும் போது, லாரியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம், ரங்கசாமி தெருவைச் சோ்ந்தவா் முருகன் (54). சுமைதூக்கும் தொழிலாளியான இவா், கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ள பெரிய பனகமுட்லு கிராமத்தில் லாரியில் சரக்குகளை ஏற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) ஈடுபட்டாா். அப்போது, அவா் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.