ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!
லாரி பட்டறையில் டயா் திருட்டு: ஒருவா் கைது!
நாமக்கல் அருகே லாரி பட்டறையில் டயா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருவப்பள்ளியில் சாலையோரம் கவிழ்ந்த லாரி பழுதுபாா்ப்புக்காக நாமக்கல் வள்ளிபுரம் அருகேயுள்ள பட்டறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவு 3 மணி அளவில், பழுதுக்காக வந்த லாரியில் இருந்த மூன்று டயா்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, பட்டறை உரிமையாளரான நாமக்கல் அண்ணாநகரை சோ்ந்த லோகநாதன் (42) நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மற்றொரு லாரியில் திருடப்பட்ட டயா்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த டயா்களை விற்பனை செய்த நாமக்கல் திண்டமங்கலத்தைச் சோ்ந்த சின்னராஜா (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். லாரியில் இருந்த மூன்று டயா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.