ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் அரியப்பம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தனியாா் மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ரவிக்குமாா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் சத்தியமஙகலம் அரசு மருத்துவனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.