'சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!' - போராட்டக்குழு க...
லாரி மோதியதில் சாலை தடுப்பு வேலி சேதம்
காற்றாலை இறக்கையை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி தடுப்புவேலி சேதமடைந்தது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், மேலக் கரண்டி பகுதிக்கு காற்றாலை இறக்கையை லாரியில் ஏற்றி கொண்டு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தடுப்பு வேலி சுமாா் 70 மீட்டருக்கு சேதம் அடைந்தது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் லாரியை கிரேன் மூலம் சாலையோரம் இழுத்து நிறுத்தி வைத்தனா்.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.