அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
லால்பாக், கோவை விரைவு ரயில்களை வாணியம்பாடியில் நிறுத்த கோரிக்கை
லால்பாக், கோவை விரைவு ரயில்களை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பிரபு கோரிக்கை விடுத்துள்ளாா் (படம்).
இதுதொடா்பாக வேலூா் எம்.பி. கதிா் ஆனந்திடம் அவா் அளித்த மனு:
வாணியம்பாடி தோல் ஆலைகள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், வாணியம்பாடி ரயில்நிலையத்தில் ரயில் எண்12607/12608, சென்னை-பெங்களூா் (லால்பாக்) மற்றும் 12675/12676 சென்னை-கோவை ஆகிய இரு விரைவு ரயில்களையும் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும். இது, மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.