லிபியா: விபத்தில் 11 அகதிகள், ஓட்டுநா் உயிரிழப்பு
சூடான் உள்நாட்டுப் போருக்கு அஞ்சி, லிபியாவில் தஞ்சமடைந்த அகதிகளை ஏற்றி வந்த காருடன் எதிரே வந்த லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் 11 அகதிகளும் காரை ஓட்டிவந்த லிபியா நாட்டவரும் உயிரிழந்தனா்.
குஃப்ரா நகருக்கு 90 கி.மீ. தொலைவிலுள்ள பாலைவனப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவா்களில் மூன்று பெண்கள், இரண்டு சிறுவா்கள் அடங்குவா் என்று தெரிவித்த அதிகாரிகள், 65 வயது நபா் மற்றும் அவரின் 10 வயது மகன் இந்த விபத்தில் காயமடைந்ததாகக் கூறினா்.