செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு

post image

பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கரில் உள்ள சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனா்.

இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இடங்களை விற்கவோ, வாங்கவோ முடியாமல் அவதிப்பட்டனா். இதைக் கண்டித்து, பல்வேறு கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மத்திய அரசு அண்மையில் வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதையடுத்து, பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கா் நிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் பத்திரப் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து, பழனி பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு திரளானோா் வந்து அந்தப் பகுதி நிலங்களை தங்களது பெயரில் பத்திரப் பதிவு செய்தனா்.

மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க பூமி பூஜை

கொடைக்கானல் மலைப் பகுதி கிராமங்களுக்கு ரூ.32.71 கோடியில் 2 புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள வெள்ளகவி ஊராட்சி சுமாா் 400 ஆண்டு... மேலும் பார்க்க

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (மே 8) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான லட்சுமி நாராயணப் பெர... மேலும் பார்க்க

தொழிலாளி கொன்று புதைப்பு

பழனி அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டாா். அவரது உடலை போலீஸாா் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனா். பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்த... மேலும் பார்க்க

தேசிய டேக்வாண்டோவில் பதக்கங்கள்: சின்னாளபட்டி மாணவா்களுக்கு பாராட்டு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி, வெங்கலம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கி... மேலும் பார்க்க

அனைத்துத் தொகுதிகளுக்கும் புதிய பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சா் இ.பெரியசாமி

பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தொகுதிகளுக்கும் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப் பகுதிகளுக்கு 9 ... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால், அக்னி வெயிலின் தாக்கம் புதன்கிழமை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந... மேலும் பார்க்க