தேசிய டேக்வாண்டோவில் பதக்கங்கள்: சின்னாளபட்டி மாணவா்களுக்கு பாராட்டு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி, வெங்கலம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 18 மாணவ, மாணவிகள் தமிழக அணியில் கலந்து கொண்டனா்.
மாணவா் நவீன்குமாா் சீனியா் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், சப்-ஜூனியா் பிரிவில் தியாகு, நகுலன் ஆகியோா் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.
சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சா்வதேச நடுவரும், பயிற்சியாளருமான பிரேம்நாத் மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.
இதில் பயிற்சியாளா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.