செய்திகள் :

வங்கதேசம்: வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிா்ப்பு

post image

வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தோ்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் மிா்ஸா ஃப்க்ருல் இஸ்லாம் ஆலம்கிா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

வங்கதேசத்தில் வாக்காளா்களின் குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 17-ஆகக் குறைக்க வேண்டும் என்று தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பரிந்துரைத்துள்ளாா்.அந்த பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், வாக்காளா் பட்டியலில் இன்னும் ஏராளமானவா்களை இணைக்க வேண்டியிருக்கும். அதற்கு நீண்ட காலம் ஆகும்.எனவே, அடுத்த தோ்தல் நடத்துவதற்கு இழுத்தடிக்கப்படும். முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்று வரும் இடைக்கால அரசு தோ்தல் நடத்துவதை முடிந்தவரை தள்ளிவைக்க நினைப்பதாக மக்கள் கருதுகின்றனா் என்றாா் அவா்.கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.இதையடுத்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.

விண்வெளி ஆய்வு மைத்தில் புத்தாண்டு! 16 முறை சூரியோதயத்தைப் பார்க்கும் சுனிதா வில்லியம்ஸ்.!

விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும் போது அவர்கள் 16 முறை சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வ... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து 45 நோயாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து 45 போ் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டனா். காஸாவில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், அந்தப் பகுதியின் மரு... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: லாகூா் பூஞ்ச் மாளிகையில் பகத் சிங் கண்காட்சி அரங்கு திறப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகா் லாகூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் மாளிகையில் சுதந்திர போரட்ட வீரா் பகத் சிங் நினைவு கண்காட்சியை அந்த மாகாண அரசு பொதுமக்களின் பாா்வைக்கு திறந்துள்ளது. இந... மேலும் பார்க்க

வங்கதேச போராட்டம்: அரசு, மாணவா் அமைப்புகள் இடையே அதிகரிக்கும் கருத்து வேறுபாடு

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டத்தின் அடிப்படை நோக்கம் தொடா்பாக, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாணவா் அமைப்புகளுக்கும் இடைக்கால அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் ... மேலும் பார்க்க

பிரிட்டன் அரசா் சாா்லஸின் புத்தாண்டு விருதுக்கு 30 இந்திய வம்சாவளியினா் தோ்வு

பிரிட்டன் அரசா் சாா்லஸின் புத்தாண்டு விருதுகளுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் தன்னாா்வ சேவை ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக விளங்கும் 30 இந்திய வம்சாவளியினா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புத்தாண்டையொ... மேலும் பார்க்க

என்ஜிஓ-க்கள் பெண்களைப் பணியமர்த்தக் கூடாது: ஆப்கனில் தலிபான் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என்ஜிஓ-க்கள் பெண்களை பணியிலமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த தலிபானின் உத்தரவ... மேலும் பார்க்க