மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!
வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
61 வயதான பில் சிம்மன்ஸ் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர் சாம்பியன்ஸ் டிராபி வரை தொடர்ந்தார்.
பில் சிம்மன்ஸ் முதல்முறையாக 2004 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக பயிற்சியாளராகத் தொடங்கினார். அதன்பின்னர், 2007 முதல் 2015 வரை அயர்லாந்து பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
அதன்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் தலைமையில் அந்த அணி, 2016 ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையையும் வென்றது. அதன்பிறகு வங்கதேசத்துடன் இணைவதற்கு முன்னதாக 2018 - 2019 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானையும் வழிநடத்தினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்னதாக, பில் சிம்மன்ஸின் தலைமையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்