செய்திகள் :

``வங்கியில் உள்ள மொத்த பணமும் வேண்டும்'' -காசோலை எழுதிய பெண்; வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

post image

வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் கேட்டு பெண் ஒருவர் விண்ணப்பித்த காசோலை இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக வங்கிக்கு சென்றாலே அங்கு இருக்கும் சலானை நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக சாமானியர்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். சிலர் அருகில் இருப்பவரிடம் உதவி கேட்டு சலானை நிரப்பி கொள்வார்கள்.

சிலர் அதில் இருக்கும் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு விண்ணப்பிப்பார்கள். அதேபோன்றுதான் இங்கு ஒரு பெண் வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

bank cheque

smartprem19 என்ற Instagram பக்கத்தில் இந்தப் புகைப்படத்துடன் கூடிய வீடியோ பதிவிடப்பட்டதை தொடர்ந்து இந்த காசோலை விவகாரம் வைரலானது.

அந்த வீடியோவில் சங்கீதா என்ற ஒரு பெண், காசோலையில் இருக்க வேண்டிய தொகை எழுதும் இடத்தில் குறிப்பிட்ட தொகையை எழுதுவதற்கு பதிலாக "வங்கியில் எவ்வளவு பணம் உள்ளதோ" என்று கேட்டு எழுதியுள்ளார். இந்த காசோலை இணையத்தில் வைரலாகி வருகிறது. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின்படி, இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடந்துள்ளது. இந்த வீடியோ 13,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

``என் பங்கு பாதி உடம்பை பிரித்து கொடு.." - தந்தையின் இறுதிச் சடங்கில் மகன் குடிபோதையில் தகராறு!

குடிகாரர்கள் குடிபோதையில் செய்யும் காரியங்கள் சில நேரம் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கும். பல நேரங்களில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தும். மத்திய பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவத்தால் ஊரே கலகலத்... மேலும் பார்க்க

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்று காதலனுடன் மாயமான மனைவி! - என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார். மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெ... மேலும் பார்க்க

டெல்லி: 'சோலிகே பீச்சே கியாஹை' பாடலுக்கு நடனமாடிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் தந்தை

டெல்லியில் ரகு (26) என்பவருக்குத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகன் மணமேடையில் மணப்பெண்ணின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் மணமகனின் நண்பர்கள் பாடல்... மேலும் பார்க்க

உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

உத்தரப்பிரதேசத்தில் ரூ.100க்கு ஆசைப்பட்டு சவால் விட்டு ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். அங்குள்ள ஜான்சி அருகில் உள்ள பூனாவாலி காலா என்ற கிராமத்தில் வசித்தவர் உத்தம் ரஜபுத். இவர் தனது நண்பர்கள் நான்கு ப... மேலும் பார்க்க

தாயை மாட்டுவண்டியில் வைத்து இழுத்து வந்த மகன்; கிரேக்கப் பெண்ணின் திருமணம்; கும்பமேளா சுவாரஸ்யங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று மட்டும் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும்... மேலும் பார்க்க