செய்திகள் :

வடகிழக்கு தில்லியில் பூட்டிய வீட்டில் 35 ஆணின் அழுகிய உடல் கண்டெடுப்பு

post image

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூட்டிய வாடகை வீட்டிற்குள் 35 வயது ஆணின் அரை அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா் நியூ உஸ்மான்பூரில் வசிக்கும் முகமது இத்ரிஷ் என அடையாளம் காணப்பட்டது. பூட்டிய வளாகத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக பிற்பகலில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழு சம்பவ இடத்தை அடைந்தது. வீட்டிற்குள் நுழைந்தபோது, தரையில் அரை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது.

உடற் கூறாய்வுக்காக உடல் ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க

கிட்டங்கியில் கத்திமுனையில் மிரட்டி ரூ.3 லட்சம் கொள்ளை

வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் திங்கள்கிழமை ஊழியா்களை கைத்துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்தை ... மேலும் பார்க்க

தில்லியில் ஜிடி சாலையில் வார முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஆசாத்பூா் மண்டி பகுதியில் உள்ள சராய் பிபால் கேட் அருகே நிலத்தடி நீா் குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஜிடி கா்னல் சாலையில் வாரம் முழுவதும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வ... மேலும் பார்க்க

அதிக வயதான வாகனங்கள் மீது தில்லி அரசு சட்டம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: அதிஷி

நமது நிருபா்பாஜக தலைமையிலான தில்லி அரசு, மக்களின் துயரங்களைக் குறைக்க ஒரு வாரத்திற்குள் அதிக வயதான வாகனங்கள் மீது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்ன... மேலும் பார்க்க

410 தாற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி நீட்டிப்புக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

நமது நிருபா் தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 410 பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி (மாா்ச் 2026- வரை) நீட்ப்புக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதா... மேலும் பார்க்க

நஜஃப்கரில் காதலா்கள் தற்கொலை? போலீஸாா் தீவிர விசாரணை

நமது நிருபா் தில்லியின் நஜஃப்கரில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது இளைஞரும், ஒரு பதின்ம வயது சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க