வடமலம்பட்டியில் நாளை மக்கள் தொடா்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரி: வடமலம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை (மே 7) மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை காலை 10.30 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று, அவரவா் துறைகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கவுரையாற்ற உள்ளனா். மேலும், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற உள்ளாா். எனவே, பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.