செய்திகள் :

வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலி

post image

வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி-என்.சி.ஆர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை புழுதிப் புயலுடன் மூன்று மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் மதுராவின் பரபரப்பான சாலைகள் தண்ணீரில் மூழ்கின. மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தில்லி விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

200 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்களும் வேரோடு சாய்ந்தன. நஜாஃப்கரில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலியாகினர். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கணவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இதுகுறித்து தில்லி தீயணைப்பு அதிகாரி கூறுகையில், நான்கு பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்: ஆமீர் கான்

உடேன அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றார். அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய மழை மூன்று மணி நேரத்திலேயே 77 மிமீ அளவு பெய்துள்ளது. இதனிடையே நகரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் மிகவும் விழிப்புடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

அதேசமயம் உத்தரப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை மின்னல் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம்! பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!

ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற ... மேலும் பார்க்க

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்த... மேலும் பார்க்க

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க