செய்திகள் :

வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! பவித்ரா லட்சுமி வேண்டுகோள்

post image

தனது உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகை பவித்ரா லட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது தான், சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அதனால் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை பவித்ரா லட்சுமி, நாய் சேகர், பவித்ரா உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களில் அவர் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவதால், பலர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமா வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியதும், பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அதனால் உடல் தோற்றம் மாறியுள்ளதாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே இது குறித்து பவித்ரா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''என்னுடைய தோற்றம் மற்றும் உடல் எடை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக இது குறித்து விளக்கம் அளித்துவிட்டபோதிலும், இந்த வதந்திகள் குறைந்தபாடாக இல்லை.

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன் என்பது போன்ற அடிப்படை உண்மையற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. என்னுடைய உடல்நிலை குறித்து சில குறிப்பிட முடியாத பதிவுகளையும் காண முடிகிறது.

நான் மீண்டும் கூறுகிறேன். எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறேன். நல்ல மனிதர்களின் கரங்களில் எனக்கு முறையான பராமரிப்பு கிடைத்து வருகிறது. இந்தக் கடுமையான நேரத்திலும் உண்மையாகவே அக்கறைகொண்டு என் உடல் நலம் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

அனைத்து ஊடகங்கள் மற்றும் மனிதர்களிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் வாழ்க்கை உள்ளது; எதிர்காலம் உள்ளது. வதந்திகளைப் பரப்பி அதனை மேலும் கடினமாக்கிவிட வேண்டாம். மிகச்சிறிய அளவிலான மரியாதையும் அன்பும் மட்டுமே உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். அதை கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் கொடுத்துவந்ததுதான். அதில் எந்த மாற்றமும் வேண்டாம். உங்கள் மகள் விரைவில் உடல் நலத்துடன் திரும்புவாள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | எஸ்.வி. சேகர் யாரென்றே தெரியாது! அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷோபனா கருத்து!

நடிகர், இசையமைப்பாளர் இல்லாமல் திரைப்படம்; ஏஐ உதவியுடன் கன்னட திரையுலகில் புதிய மைல்கல்!

கன்னட திரையுலகில் புதிய மைல்கல்லாக, முழுவதும் செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், ச... மேலும் பார்க்க

நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் பட... மேலும் பார்க்க

40 ஷாட்டுகள்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய பார்சிலோனா!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.லூயிஸ் கம்பெனிஸ் ஒலிம்பிக் திடலில் நடைபெற்ற இன்றைய (ஏப்.23) போட்டியில் பார்சிலோனா அணியும் மல்லோர்கா அணியும் மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி பட டிரைலரை வெளியிட்ட அட்லி!

இயக்குநர் அட்லி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் சிம்ரன்,... மேலும் பார்க்க

கணவன் - மனைவி குறித்து உருவ கேலி... நடிகை வைஷ்ணவி வருத்தம்!

கணவன் - மனைவி இடையே இருக்கும் மனபொருத்தத்தைவிட சிலருக்கு உருவ கேலியே பெரிதாகத் தெரிகிறது என சின்ன திரை நடிகை வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரில் ந... மேலும் பார்க்க