குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது
வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அவர் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இதையும் படிக்க: ரிஷப் பந்த்தின் முதல் இன்னிங்ஸ்தான் ஆச்சரியமளித்தது: ஆஸி. தலைமைப் பயிற்சியாளர்
மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டி எனவும், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன் அவர் ஓய்வு முடிவை அறிவித்துவிடுவார் என்ற பேச்சுகளும் வலம் வருகின்றன.
வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்
கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வரும் நிலையில், வதந்திகளை கண்டு கொள்ளாமல் இந்திய அணி வீரர்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளியிலிருந்து பரவும் வதந்திகள் எதுவும் வீரர்களை பாதிக்காது. ஏனெனில், வீரர்கள் இரும்பினால் செய்யப்பட்டவர்கள். அவர்கள் மனது மிகவும் வலிமையானது. மனவலிமையுடன் கூடிய வீரர்களை உருவாக்குவதற்கு எங்களது சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவை குறித்து கவலையடையக் கூடாது. அந்த விஷயங்களில் நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது.
இதையும் படிக்க:பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
வெளியில் பேசப்படும் விஷயங்களை நினைத்து நம்மால் என்ன செய்ய முடியும். போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்த அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது கூறுங்கள். இந்தத் தொடரை வெல்ல முடியாவிட்டாலும், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைப்பதற்கான அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு, கோப்பையை தக்கவைக்க வேண்டும் என்றார்.