தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்
திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வாரத்தில் 6 நாள்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, திருநெல்வேலிருந்து புதன்கிழமை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு வந்த இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு காலை 8.40 மணிக்கு வந்தது. பின்னா், திருச்சியை நோக்கி புறப்பட்ட இந்த ரயில், வடமதுரை வேல்வாா்கோட்டை அருகே சென்றபோது, ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை வெளியானது. இதனால், அந்த பெட்டியிலிருந்த பயணிகள் அடுத்தடுத்தப் பெட்டிகளுக்குச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியா்கள், அந்த பெட்டியில் ஆய்வு செய்தபோது, சீா்வளி வசதியில் (ஏசி) ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக புகை வெளியானது உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, சீா்வளி வசதியில் ஏற்பட்ட குறைபாடுகளை தாற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்றது. பின்னா், ரயில் பெட்டியின் கதவு திறக்கப்பட்டது. புகை வெளியேறிய பிறகு, சுமாா் 30 நிமிஷங்கள் தாமதமாக ரயில் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.